இறைவனின் நியதி..!

படிக்க பணமின்றி பரிதவிக்கும் ஒரு கூட்டம்…

படிக்க பணமிருந்தும் மனமின்றி அழைகின்றது ஒரு கூட்டம்…

உண்ண உணவின்றி உயிருக்கு போராட்டம்…

உண்ண உணவிருந்தும் உண்ணமுடியாமல் அலைபாய்கிறது எண்ணோட்டம்…

உரங்க ஒரு இடமின்றி ஊசலாடுகிறது ஒரு கூட்டம்…

உரங்க பல இடமிருந்தும் உரங்கமறுக்கும் விழிகளோடு ஒருகூட்டம்…

உடுத்த ஒரு உடை இன்றி உள்ளம் குமுறும் ஒரு கூட்டம்…

உடுத்த பல உடையிருந்தும் கொடுக்க மனமில்லா ஒரு கூட்டம் – இப்படியாக

வருமையில் வாடுகிறது ஒரு கூட்டம்…

தலை கால் தெரியாமல் செழுமையில் ஆடுகிறது ஒரு கூட்டம்…

தேவையிருந்தும் பொருளில்லா ஒரு கூட்டம்…

பொருளிருந்தும் தேவையில்லா ஒரு கூட்டம்…

இது இறைவனின் நியதியல்லவோ…


அன்புடன்

முத்துப்பேட்டை அலீம்

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

1 thought on “இறைவனின் நியதி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *