சுதந்திர இந்தியாவில் கல்வியிலே,பொருளாதாரத்திலே, அரசியல் செல்வாக்கிலே பின்தங்கி இருந்த இஸ்லாமிய சமூகத்திற்கு ஒரு கொடுமை நிகழ்த்தப்பட்டால் கேட்பதற்கு நாதியற்ற நேரத்திலே
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், கடும் போக்கு உடையவர்கள் என்ற எண்ணங்களும், பிரச்சாரமும் இந்தியா முழுவதும் பரவிக் கிடந்த நேரத்திலே
சேவை என்றால் என்னவென்று தெரியாத சமூகங்கள் கட்டமைக்கப்பட்டு இருந்த நேரத்திலே
மனிதநேயம் என்றால் என்னவென்றே தெரியாத மனித மிருகங்கள் உலா வந்து கொண்டிருந்த நேரத்திலே
இஸ்லாத்தின் அடிப்படைகளையும், முஸ்லிம்களின் பண்புகளையும் பற்றிய எவ்வித புரிதலும் இல்லாது குறை கூறப்பட்டு வந்த நேரத்திலே உதயமானது தான் தமுமுக.
1995க்கு முன் எந்த ஒரு சமூகமும் பார்த்திராத ஒரு புதுமையான சமூக சேவையாற்றும் பேரமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அரசியல் என்பது இப்படியும் இருக்க முடியுமா என்று ஒட்டு மொத்த இந்திய சமூகமும் திரும்பிப் பார்க்க வைத்தது தமுமுக.
ஏழைப் பெண்களுக்கான திருமண உதவிகள்
இரத்த தானம்
கல்வி கருத்தரங்குகள்
கல்வி உதவிகள்
மருத்துவ முகாம்கள்
மருத்துவ உதவிகள்
பேரிடர் மீட்பு பணிகள்
பேரிடர் கால பொருளாதார உதவிகள்
ஆம்புலன்ஸ் சேவைகள்
என எண்ணற்ற சேவைகளை செயல்படுத்தும் ஒரே அரசியல் அமைப்பு தமுமுக.
இன்று எண்ணற்ற அமைப்புகள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுக்க காரணமாய் விளங்கிய முன்னோடியான அமைப்பு தான் தமுமுக.
தமிழகத்தின் தனித்துவமான தமுமுகவின் ஆம்புலன்ஸ் சேவை இன்று பல்வேறு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டாலும் முதன்மையானதாக திகழுவது தமுமுக.
மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய மத்திய அரசு எமனாக இருக்கின்றது. அதை பயன்படுத்தி காவி கும்பல் எமனுக்கு வலு சேர்க்கும் கரமாக துணை நிற்க அதனை துணிவுடனும் , சட்டத்தின் துணையுடனும் எதிர் கொண்டு சமூகம் நலமுடன் வாழ திறனுடன் போராடுவது தமுமுக.
இப்படி அனைத்திலும் முதன்மையாக முன்னோடியாக திகழ்வது தமுமுக என்றால் அது மிகை அல்ல.
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்