அன்பு மகனே..!
உன் பேச்சில்
தாக்கத்தை ஏற்படுத்து.!
தூக்கத்தை ஏற்படுத்திவிடாதே..!
அன்பு மகனே..!
உன் சிரிப்பில்
ஆனந்தத்தை காட்டு.!
ஆணவத்தை காட்டி விடாதே..!
அன்பு மகனே..!
உன் கோபத்தில்
நியாயத்தை பேசு.!
காயத்தை ஏற்படுத்திவிடாதே..!
அன்பு மகனே..!
உன் நட்பில்
மகிழ்ச்சியை உருவாக்கு.!
இகழ்ச்சியை உருவாக்கி விடாதே..!
அன்பு மகனே..!
உன் அழுகையில்
அன்பை வெளிப்படுத்து.!
அச்சத்தை வெளிப்படுத்தாதே..!
அன்பு மகனே..!
உன் பாசத்தில்
பக்குவமாய் நடந்துகொள்.!
பல்லிழித்து விடாதே..!
அன்பு மகனே ..!
உன் ஆசையில்
அறத்தை பேணு.!
ஆபத்தை தேடிக்கொள்ளாதே..!
அன்பு மகனே ..!
உன் வீரத்தில்
விவேகத்தை காட்டு.!
வேகத்தை காட்டிவிடாதே..!
அன்பு மகனே ..!
உன் கருணையில்
தியாகத்தை காட்டு.!
துரோகத்தை காட்டி விடாதே..!
அன்பு மகனே ..!
உன் உதவியில்
மற்றவர்களை வாழச் செய்.!
தாழச் செய்துவிடாதே..!
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்