தளம் பற்றி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

 ஹமாஸ்.காம் கடந்த 19-06-2012 முதல் இணையத்தில் இயங்கி வந்தது. மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கடந்த 2015 ஜூன் 20ம் தேதி முதல் நமது ஹமாஸ்.காம் தளம் புதிய பொழிவுடனும், இஸ்லாமிய தமிழ் இணைய தளங்கள் பற்றிய விமர்சனங்கள் போன்ற புதிய செயல்பாடுகளுடனும், இயங்க தொடங்கியது.

 இத்தளம் இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களையும், சமூகத்தின் கவனமின்மையையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு துவங்கப்பட்டது.

ஹமாஸ்.காம் தளத்தில் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள், கவிதைகள், தொடர்கள் மற்றும் தொழில் சார்ந்த பதிவுகள் என பல்சுவைப் பகுதிகளும் பதிவிடப்பட்டன.

தளத்தின் பெயர் காரணமாக நமது தளத்தை வெளியில் தெரிந்துவிடாதபடி தடுக்கப்பட்டு வந்ததை கருத்தில் கொண்டும், நமது விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடும் தளத்தின் பெயர் மற்றும் அதன் இணையதள முகவரி ஆகியவற்றை மாற்றம் செய்தோம்.

ஹமாஸ் என்றால் உற்சாகம் என்பது பொருள். அந்த வார்த்தை பிரயோகத்தை மக்கள் மற்றும் அரசு ஏதோ தவரான வார்த்தை போல நினைப்பதுவே நமது தளம் மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை.

ஆகவே இமாலயா என்ற எமது தொழில் நிருவனத்தின் ஒரு பகுதியாக இதனை மாற்றி அதன் பெயரிலேயே 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இயக்கி கொண்டிருந்தோம். ஆனாலும் விழிப்புணர்வு தளம் தனிப் பெயரில் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க வலையுகம் என்ற பெயரில் இனி இயக்கப்படும்.

இந்த வலையுகம் என்ற பெயரை பல ஆண்டுகளாக அன்பு சகோதரர் ஹைதர் அலி இயக்கி வந்திருந்தார்கள். ஏதோ காரணமாக அந்த தளம் முடக்க நிலையில் இருந்தது. அந்த வலையுகம்.காம் தற்போது நமது தளத்திற்கு மாற்றம் செய்துள்ளோம்.

எப்போதும் போல மக்கள் நல்லாதரவு தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்புடன் நிர்வாகம் வலையுகம்.காம்

சமூக அவலங்களை தோழுரிக்கும் தளம் வலையுகம் – இது தமிழ் உலகின் தனியுகம்…

இருபதாம் நூற்றாண்டின் அபரிமித விஞ்ஞான வளர்ச்சியில் மாபெரும் பங்கு வகிப்பது வலைதளம். அரசு முதல் ஆண்டி வரை ஒட்டு மொத்த மனித குலமே ஏதோ ஒருவகையில் இணையத்தில் இணைந்து தான் இருக்கின்றனர்.

நேர்கொண்ட பார்வையில் பார்ப்பவர்களும் உண்டு, எதிர்மறை கோணங்களில் காண்பவர்களும் உண்டு, நல்லவனும் உண்டு, கெட்டவனும் உண்டு, படித்தவனும் உண்டு, பாமரனும் உண்டு. இப்படி யாரும் விதிவிலக்கு இல்லாமல் ஒருசேர இணையும் இடம் தான் இணையதளம். ஒரு நாடே முடங்கினாலும் இணையம் மூலம் நாட்டின் மக்களை இணைக்கக் கூடிய ஒரு பாலம் தான் இணையதளம் எனும் வலைதளம்.
ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உண்டு. நாம் வாழும் யுகம் தான் வலையுகம்.