வினவுக்கு விளக்கம்
பொருளடக்கம்
பொருளடக்கம்
அன்புள்ளம் கொண்ட சமூக சொந்தங்களே…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
தமிழகத்தின் தலை நகரிலும், கடலூர் போன்ற நகரங்களிலும் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து இஸ்லாமிய சமூகம் மிகப்பெரும் பங்களிப்பை செய்து வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்…
வினவு.காம் இணையதளம் முஸ்லிம்களின் களப்பணியை பாராட்டும் போது, இப்படி விமர்சிக்கிறது.
வினவின் விமர்சனம்:
சென்னை மழை வெள்ள நிவாரணப் பணிகளில் இதுதான் நடந்திருக்கிறது. தாங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்காகத்தான் நிவாரணப் பணிகளை செய்தோம் என்று சில முஸ்லீம்கள் கூறினாலும் அவர்களை அப்படி சேவை செய்ய வைத்தது, மதமல்ல. கஷ்டப்படும் மக்களை நேரில் பார்த்ததாலும், பிறகு மற்ற பிரிவு மக்கள் பாராட்டுவதால் வரும் உற்சாகமுமே முஸ்லீம் அமைப்பு தொண்டர்களை இயங்க வைத்தன என்பது எமது கருத்து.
(மேலும் ஒரு இடத்தில் இவ்வாறு விவரிக்கிறது.)
நமது அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளுக்காக எந்த மதத்திலும் தீர்வோ, வழியோ கிடையாது.
வினவுக்கு விளக்கம் – எமது விளக்கம் :
- கஷ்டப்படுவதை பார்த்தவர்கள் முஸ்லிம்கள் மட்டும் தானா? அல்லது நேரில் பார்த்த மற்றவர்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்று சொல்ல வருகின்றீர்களா?
2.புகழ்ச்சிக்காகத்தான் சமூக சேவை செய்கிறார்களா? - அரசியல், சமூக, பொருளாதார, சமூக உரிமைகளுக்கான தீர்வு இஸ்லாத்தில் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா?
முதலில் அரசியல், சமூக, பொருளாதார, சமூக உரிமைகளுக்கான தீர்வு இஸ்லாத்தில் உண்டா என்ற கேள்விக்கு உண்டு என்று ஆணித்தரமாக சொல்வோம். எதில் உங்களுக்கு தீர்வு வேண்டும்? சொன்னால் இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வை தர தயாராக உள்ளோம்.
எம் சமூகத்தின் சமூக சேவை என்பது பாராட்டுக்களை கண்டு உற்சாகத்தில் உண்டானதல்ல…. மாறாக எங்கள் ரோல் மாடல் முஹம்மது நபியின் அறிவுரை தான் என்பதை ஆதாரத்துடன் தருகின்றேன்.
“எந்த நன்மையையும் சாதாரணமாக எண்ண வேண்டாம்! உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாயினும் சரியே!” என்று நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கூறினார்கள் என அபூதர்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம் 144, 2626, 6857)
மலர்ந்த முகத்துடன் அவர்களுக்கு ஆருதல் சொல்ல கற்றுக்கொடுத்தது இஸ்லாம் தான்.
அபூதர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 1956, இப்னு ஹிப்பான் 474)
தர்மத்திற்கு இப்படி ஒரு விளக்கத்தை யாரால் கொடுக்க முடியும். எங்கள் உயிரினும் மேலான முஹம்மது நபி அவர்களை தவிர…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள், வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்.” மேலும் கூறினார்கள்: “மனிதர்களுக்கு கருணை காட்டாதவர் மீது அல்லாஹ் கருணை காட்டமாட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)
கருணை காட்ட சொல்லும் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் காட்ட சொல்லவில்லை மாறாக பூமியில் உள்ளோர் மீது என்று ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் குறிப்பிட்டு சொல்லிய மார்க்கம் இஸ்லாம்.
நபி (ஸல்) அவர்கள் தமது பேரரான ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அருகிலிருந்த அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) “எனக்கு பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; நான் அவர்களில் எவரையும் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை நோக்கி பார்வையை செலுத்திய நபி (ஸல்) அவர்கள் “எவர் இரக்கம் காட்டவில்லையோ அவர் இரக்கம் காட்டப்படமாட்டார்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)
சக மனிதர்களிடம் இரக்கம் காட்டாதவனுக்கு இறைவன் இரக்கம் காட்ட மாட்டான் என்று இரக்கம் காட்ட ஊக்குவிக்கும் மார்க்கம் இஸ்லாம்.
உமர் (ரழி) அவர்கள் ஒரு மனிதரை ஒரு பகுதி மக்களுக்குத் தலைவராக்க விரும்பினார்கள். அம்மனிதர் அக்ரஃ இப்னு ஹாபிஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல “குழந்தைகளை முத்தமிடமாட்டேன்’ என்று சொல்வதைக் கேட்டார்கள்.
அவரைப் பொறுப்பாளராக்குவதை ரத்து செய்தவர்களாகக் கூறினார்கள்: “உமது மனம் உமது குழந்தைகளிடம் கருணை காட்ட வில்லையானால் எப்படி நீர் மற்ற மனிதர்களிடம் கருணையுடன் நடந்து கொள்வீர்?
அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை ஒருபோதும் தலைவராக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு அவரைத் தலைவராக்குவதற்கான அதிகாரப் பத்திரத்தைக் கிழித்தெறிந்தார்கள்.
ஒரு பகுதியின் தலைவர் பொருப்பை பெறுவதற்க்கான தகுதியாக கருணை உள்ளத்தை தேர்வு செய்த மார்க்கம் இஸ்லாம்.
வினவுக்கு விளக்கம் – உங்கள் புகழ்ச்சியை எதிர்பார்த்து அல்ல… மேலும் ஆயிரமாயிரம் ஆதாரங்களை எடுத்து கொடுக்க முடியும், ஆனால் இதுவே போதுமானது. உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அது தான் சரி என்று நினைப்பதை விடுத்து உண்மையை விளங்கி கருத்திடுங்கள்.
ஒரு விசயத்தில் நான் உங்களுடன் ஒத்துப்போகின்றேன்.
இதில்…
சங் பரிவாரம் நாட்டின் பல பகுதிகளிலும் வெற்றி பெறுகிறான். ஏன் கேரளாவில் கூட கால் ஊன்றிவிட்டான். தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை. இதற்கு இஸ்லாமிய அமைப்புகளா காரணம்? இல்லை. பெரியார் நாடு என்பதால் தான் முடியவில்லை.
அன்புடன் முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க : Chennai Floods – Humanities | கனமழையை விட கனமான மனிதநேயம்