பெண்களுக்கு எதிரானதா இஸ்லாம்? பகுதி – 1

பல்வேறு சந்தர்ப்பங்களில் இஸ்லாம் பெண்களுக்கு எதிரான மார்க்கம் என்பது போல பலரும் பேசித்திரிவதை பார்க்கின்றோம். உண்மையில் பெண்களுக்கு எதிரானதா இஸ்லாம்? பெண்களை அடிமைபடுத்துகிறதா இஸ்லாம்? பெண்களை இழிவுபடுத்துகிறதா இஸ்லாம்? பெண்களின் உரிமைகளுக்கு எதிரானதா இஸ்லாம்? பெண்களுக்கான சலுகைகளை வழங்க மறுக்கிறதா இஸ்லாம்? இந்த கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன் சிலவற்றை ஆராய வேண்டும்.

ஆண்களுக்கு பெண் நிகரானவளா?
ஆண்களோடு பெண்கள் போட்டி போட முடியுமா? ஆண்களுக்கு நிகராக செயல்பட முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது. உடற்கூறு ரீதியாக பெண்கள் ஆண்களோடு போட்டியிட முடியாது. தற்போதய ஆராய்ச்சியானது சிந்தனை சக்தி, ஞாபக சக்தி, ஆளுமைத் திறன் அனைத்திலுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளதாக இன்றைய அறிவியல் கூறுகிறது. மேலும் பெண் உடற்கூறு அளவில் பலஹீனமாகவே இருக்கின்றாள். உடற்கூறு என்பதில் மூளையும் அடங்கும். ஆகவே ஆணும் பெண்ணும் சமமாவதில்லை.

உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் பெண்கள் ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். அதாவது, ஆண்கள் கீழாடை மட்டும் அணிந்து மேலாடை இல்லாமல் தெருக்களில் செல்வது போல், நாங்களும் மேலாடையின்றி தெருக்களில் செல்வோம் என்று கோஷம் எழுப்பினார்கள். இதனை இன்று ஆணுக்கு பெண் சமம் என்று பேசுபவர்கள் தங்கள் வீட்டில் செயல்படுத்த முடியுமா? முடியவே முடியாது, என்றால் எங்கே சமம்?

பெண்கள் இயல்பாகவே கவர்ச்சியாக படைக்கப்பட்டவள் தான். அந்த கவர்ச்சியை தவராக உபயோகிக்கும் கூட்டம் தான் சம உரிமை பற்றி பேசுகின்றது. தீப்பெட்டி தயாரிக்கும் நிருவனங்கள் முதல் வாகனங்கள் தயாரிக்கும் நிருவனங்கள் வரை தங்கள் விளம்பரத்தில் அரை குறை ஆடையுடன் கூடிய பெண்களையே முன்னிலை படுத்துகின்றன. திரைப்படங்களில் பெண்கள் கவர்ச்சியாக, போகப் பொருளாக சித்தரிக்கப்பட்டு சீரழிக்கப்படுகிறாள். இது தான் சம உரிமையோ? ஆணும் பெண்ணும் சமமே. ஆனால் எல்லாவற்றிலும் அல்ல என்பதை யாரும் மறுக்க முடியாது.

(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் – அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன்4:34)

சிலரை சிலரை விட என்றே இறைவனும் குறிப்பிடுகின்றான். இங்கே பெண்களை விட ஆண்களையே மேன்மை படுத்தி வைத்திருப்பதாக சொல்லப்படவில்லை என்பதை கருத்தில் கொள்க.
அவ்வாறு இறைவன் குறிப்பிட காரணம் பல உண்டு அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

நிர மூர்த்தத்தில் உள்ள வேறுபாடு (Chromosome) :
பரம்பரையை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் நிர மூர்த்தத்தில் பெண்களின் நிரமூர்த்தம் XX என்றும் ஆண்களின் நிரமூர்த்தம் XY அமைப்பிலும் அமைந்த்துள்ளதை காண முடிகிறது.

பார்வை புலன்:
பெண்களால் 180 பாகை கோணத்தில் அருகில் உள்ளவற்றை காண முடியும், ஆனால் தூரத்தில் உள்ளவற்றை காண முடியாது. ஆண்களால் 90 பாகை கோணத்தில் மட்டுமே காண முடியும், அதேவேலையில் தூரத்தில் உள்ளவற்றையும் காண முடியும்.

கவனம் செலுத்தும் திரன்:
பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடிய வகையில் உள்ளது. ஆண்களுக்கு அவ்வாறு இல்லை, மாறாக ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யும்.

நிறம் அறிதலில் மாற்றம்:
நிறத்தை துள்ளியமாக அறிவது பெண்களே. ஆண்களால் முடியாது. உதாரணமாக ஜவுளி கடைக்கு செல்லும் ஆணும் பெண்ணும் எடுத்துக்கொள்ளும் நேரம்.

மொழி அறிவு:
பெண்களால் இலகுவாக மொழிகளை கற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஆண்களால் முடியாது.

பகுத்துணர்வு :
பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒரு விசயத்தை பகுத்து ஆய்ந்து முடிவெடுக்கும் திரமையும் ஆண்களுக்கே அதிகம். பெண்களால் முடிவதில்லை.

தீர்வு காணுதல்:
ஒவ்வொறு பிரச்சினைக்கும் படிப்படியாக தனித்தனியே தீர்வு காணும் திரமை ஆண்களுக்கே உள்ளது.

உடல் மொழி ( Body Language):
பெண்களால் உடல் மொழிகளை எழிதில் புரிந்து கொள்ள முடியும். ஆண்களால் முடிவதில்லை.

நியாபக சக்தி:
எண்களை (இலக்கங்களை) நினைவில் கொள்ளும் நியாபக சக்தி பெண்களுக்கே அதிகம். உதாரணமாக ஆண்கள், குழந்தைகளின் பிறந்த தேதியை நினைவில் கொள்வதில்லை.

உடல் வலிமை:
உடலால் வலிமை படைத்தவன் ஆண்களே.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இல்லை என்பதை தாண்டி சிலவற்றில் ஆண்களும் சிலவற்றில் பெண்களும் சிறப்பை பெற்றுள்ளதை அறிய முடியும்.

இன்ஷா அல்லாஹ் இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்…

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *