எப்போது புரியும் உமக்கு
சத்தியத்தை கண்டும் காணாமல் போகிறாய்…
அசத்தியத்தை காணத் தேடி அழைகிறாய்…
மெய் மறந்து வாழும் மானிடனே…
சாத்தியத்தை கண்டும் அலட்சியமாய் பார்க்கிறாய்…
அசாத்திய இருளில் மூழ்கி இறக்கவே விரும்புகிறாய்…
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
படைத்தவனை விடுத்து கிடைத்தவனை வணங்குகிறாய்…
மடைதிரந்த வெள்ளமாம் மானுட வசந்தத்தை ஏற்க மறுக்கிறாய்…
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
அற்ப்ப வாழ்க்கையை ஆசையோடு தழுவுகிறாய்…
கர்ப்ப கோளறையில் பாதுகாத்தவனை வெறுக்கிறாய்…
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
சிந்திக்கத் தெரியாமல் சந்தியில் நிர்க்கிறாய்…
சந்திக்கும் நாள்தனை நித்தம் எதிர்க்கிறாய்…
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
படைத்தவன் உம்மை வழி கெடுப்பானா? வழி கெடுப்பவன் உம்மை படைத்தானா?
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
அறிவியல் வளர்ச்சியை கண்டு அதிசயிக்கும் மானிடனே…
அகிலத்தை படைத்தவனை அறிவதற்கு முடியவில்லையோ?
மெய் மறந்து வாழும் மானிடனே…
எப்போது புரியும் உமக்கு…
திறந்து பார் திருக்குர்ஆனை…
உன் மனக்கதவும் திறக்கப்படலாம்…
அன்புடன் முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க : Umrah – உம்ரா அனுபவம்