• About
  • Contact
  • Privacy
  • Terms
  • Disclaimer
Monday, September 25, 2023
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கவிதைகள்
  • செய்திகள்
    • அரசியல்
    • ஊடகம்
    • விழிப்புணர்வு
    • பொருளாதாரம்
    • கல்வி
  • தளங்கள்
No Result
View All Result
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கவிதைகள்
  • செய்திகள்
    • அரசியல்
    • ஊடகம்
    • விழிப்புணர்வு
    • பொருளாதாரம்
    • கல்வி
  • தளங்கள்
No Result
View All Result
VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு
No Result
View All Result
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கல்வி
  • கவிதைகள்
  • செய்திகள்
  • விழிப்புணர்வு
  • அரசியல்
  • ஊடகம்
  • தளங்கள்
  • பொருளாதாரம்
Home விழிப்புணர்வு

Drugs Addiction – போதை – சீரழியும் இளைஞர் சமுதாயம்

in விழிப்புணர்வு
Drugs Addiction

Drugs Addiction

11
SHARES
100
VIEWS
FacebookTwitterPinterestWhatsapp

Drugs Addiction – போதை – சீரழியும் இளைஞர் சமுதாயம்

பொருளடக்கம்

  • Drugs Addiction – போதை – சீரழியும் இளைஞர் சமுதாயம்
    • அறிமுகம்
    • Drugs Addiction – போதைப் பொருள் உபயோகம் பற்றி இஸ்லாமிய பார்வை
    • அதிகரித்த போதைப் பொருள் உபயோகத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
    • Drugs Addiction சீரழியும் இளைஞர் சமுதாயம்
    • பொது வாழ்வில் ஏற்படும் போட்டி சூழலுக்கு முகம் கொடுக்க முடியாமை
    • மீடியாவின் போதைக்கு ஆதரவான பிரச்சாரம்
    • போதையால் ஏற்படும் உடல் , உள பாதிப்புகள்

அறிமுகம்

Drugs Addiction சீரழியும் இளைஞர் சமுதாயம் – போதைப் பொருள் (Drugs Addiction) உபயோகம் உலக அளவில் மோசமாக அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒழிப்பதற்கான கடும் நடவடிக்கைகளை ஒவ்வொரு நாட்டின் அரசும் முன்னெடுத்து வருகின்றது. இருந்த போதிலும் ஒவ்வொரு நாளும் போதைப்பொருள் பயன்பாடு குறித்த செய்திகள் வந்தவண்ணமே இருக்கின்றன.

உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் (243 கோடி) 3ல் 1 பகுதி மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

இவர்களுல் 80% ஆண்களும் 20% பெண்களும் அடங்குவர். கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் பேர் போதைப்பொருள் பயன்பாடு காரணமாக உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக நாடுகள் எல்லாம் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து கட்டுப்படுத்தி வருகின்றன.

ஆனால் ஹெரோயின்ஹெரோயின், கஞ்சா போன்ற பொருட்களை விற்பதும் பிற நாடுகளுக்கு கடத்துவதும் இன்று வரையிலும் பெரும் இலாபம் தரும் தொழிலாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

உலகளாவியரீதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் 1987 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையினால் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் போதைப்பொருள் ஒழிப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் சீரழியும் இளைஞர் சமுதாயம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.

பொருளடக்கம்

  • Drugs Addiction – போதை – சீரழியும் இளைஞர் சமுதாயம்
    • அறிமுகம்
    • Drugs Addiction – போதைப் பொருள் உபயோகம் பற்றி இஸ்லாமிய பார்வை
    • அதிகரித்த போதைப் பொருள் உபயோகத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்
    • Drugs Addiction சீரழியும் இளைஞர் சமுதாயம்
    • பொது வாழ்வில் ஏற்படும் போட்டி சூழலுக்கு முகம் கொடுக்க முடியாமை
    • மீடியாவின் போதைக்கு ஆதரவான பிரச்சாரம்
    • போதையால் ஏற்படும் உடல் , உள பாதிப்புகள்

Drugs Addiction – போதைப் பொருள் உபயோகம் பற்றி இஸ்லாமிய பார்வை

ஜாஹிலிய்யாக்கால மக்கள் மதுபானப் பிரியர்களாக இருந்தனர். இஸ்லாம் மதுபானத்தை கட்டம் கட்டமாக, படிப்படியாக தடைசெய்து, இறுதியில் மதுப் பழக்கத்தை முற்றாக ஒழித்தது.

ஆரம்பத்தில் மதுபானத்தில் உள்ள நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்று அல்குர்ஆன் கூறியது.

அடுத்த கட்டமாக போதையுள்ள நிலையில் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தது.

மூன்றாம் கட்டமாக ஸுரா அல்மாயிதாவின் 90, 91ஆம் வசனங்கள் இறங்கின:

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

”விசுவாசிகளே! மதுபானமும் சூதாட்டமும் விக்கிரக வணக்கமும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளிலுள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்”

اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ‏

”மதுபானத்தின் மூலமும் சூதாட்டத்தின் மூலமும் உங்களுக்கிடையில் விரோதத்தையும் குரோதத்தையும் உருவாக்கவும் அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே இவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா?”

அல்லாஹுதஆலா இந்த இரு வசனங்களிலும் மதுபானத்தையும் சூதாட்டத்தையும் ஷிர்க்குடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளான்.

அறுவருக்கத்தக்க செயல்கள் என்றும் வர்ணிக்கின்றான்.

மதுவையும், சூதையும் தவிர்ப்பதை வெற்றிக்கான வழி என்றும் கூறுகின்றான்.

மேலும் இவை இரண்டின் மூலமாகவும் ஏற்படும் சமூக ரீதியான தீங்குகள் என, உறவுகள் அறுக்கப்படுவதையும், பகைமையும் வெறுப்பும் தோன்றுவதையும் குறிப்பிட்டுள்ளான்.

மேலும் திக்ர், தொழுகை முதலான ஆன்மீக சன்மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இவை இரண்டும் அமைகின்றன எனக் கூறி இவற்றினால் விளையும் ஆன்மீகக் கேடுகளையும் அல்லாஹ் விளக்குகின்றான்.

இந்த அல்குர்ஆன் வசனங்களை நபித் தோழர்கள், இறைவிசுவாசிகள் எதிர்கொண்ட விதம் அற்புதமானது.

அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை செவிமடுத்தவுடன் மதுக் கிண்ணங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தோர் அப்படியே அவைகளை தரையில் தூக்கி எறிந்தார்கள்.

வீதிகளில் இருந்த மதுபானப் பீப்பாக்களை உடன் கொட்டி வீதிகளில் ஓடவிட்டார்கள்.

இஸ்லாம் மதுபானத்தை ஹராமாக்கியுள்ளமைக்கான காரணம் அது போதையை ஏற்படுத்துகின்றது என்பதாகும்.

எனவே, ஒரு பானம் எந்தப் பொருளில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் எந்தவிதமான பொருள் சேர்க்கப்பட்டிருந்தாலும் அது போதையை ஏற்படுத்தும் என்றிருந்தால் அது ஹராமாகக் கொள்ளப்படும். இதுவே இஸ்லாத்தின் வரையறை.

தீமைகள் அனைத்திற்கும் தாயானது போதையாகும் . தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும்.
இப்னுமாஜா : 3371

ஒரு முறை நபியவர்களிடம் தேன், அல்லது பார்லி அல்லது கோதுமை முதலானவற்றில் தயாரிக்கப்படும் ஒருவகை மதுபானம் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் கூறினார்கள்:

‘போதையை ஏற்படுத்தும் அனைத்தும் ‘கம்ர்’ எனும் மதுபானமாகும். அனைத்து ‘கம்ரும்’ ஹராமாகும்.’ (முஸ்லிம்)

மேலும் அதிக போதை ஏற்படுத்தக்கூடிய மதுபானங்கள் மட்டுமன்றி குறைவாகப் போதையைக் கொடுப்பவையும் ஹராமானவையாகும். நபி(ஸல்) அவர்களின் அழகிய நபிமொழி ஒன்றை பாருங்கள்.

அதிக போதை ஏற்படுத்தக் கூடியதை குறைவாக உட்கொள்வதும் ஹராமாகும்’ (அஹ்மத், அபூதாவுத், திர்மிதி).

அந்த வகையில் மதுபானம் போன்றவற்றில் ஓரிரு மிடர்கள் அருந்துவதும் ஹராமானதாகவே கொள்ளப்படும்.

மதுபானம் அருந்துவது மட்டுமன்றி அதை விற்பனை செய்வதும் ஹராமானதாகும். ஒரு முஸ்லிம் மதுபானம் தயாரிக்கவோ, விற்கவோ, விற்கும் இடத்தில் வேலை செய்யவோ முடியாது.

மதுபானம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள், அதனை தயாரிப்பவர், விற்பவர், வாங்குபவர், குடிப்பவர், சுமப்பவர் உட்பட மதுபானம் பரிமாறப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்புச் செய்யும் பத்துப் பேரை சபித்தார்கள் (திர்மிதி)

அதிகரித்த போதைப் பொருள் உபயோகத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

Drugs Addictionவீட்டுச் சூழலிலிருந்து பல பிள்ளைகள் போதை பழக்கத்திற்கு ஆளாகுகின்றார்கள்.

தந்தை சிகரட் புகைப்பவராக இருந்தால், அந்த சிகரட்டை வாங்குவதற்கு பிள்ளையிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்.

அந்தப் பிள்ளை தந்தையுடைய சிகரெட் பிடிக்கும் “ஸ்டைலை” பார்த்து நாளடைவில் அதனை திருட்டுத் தனமாக புகைக்க ஆரம்பிக்கின்றது.

வீட்டில் நடக்கும் விசேஷங்களின் போது பியர் மற்றும் மது உபயோகப்படுத்தப்படும் போது பிள்ளைகள் அவற்றின் ஆபத்துக்களை பொருட்படுத்தாமல் அவர்களும் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர்.

வீட்டுச் சூழலில் பயன்படுத்திய போதைபொருட்களை பிள்ளைகள் நாளடைவில் சமூக சூழலில் சக தோழர்களுடன் தொடர்ந்தும் பழகிக் கொள்ள முனைகின்றனர்.

சிலவேளை வீட்டுச் சூழலில் சிகரட் புகைத்தல், மது அருந்துதல் போன்றவை இல்லாவிட்டாலும் சமூக சூழலில் அவை பயன்பாட்டில் இருக்குமாயின் அவர்கள் இலகுவில் போதைக்கு ஆளாகிவிடுவார்கள். இது போன்ற காரணங்களால் சீரழியும் இளைஞர் சமுதாயம் அதிலிருந்து வெளியேற வேண்டும். அதற்க்கு பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் அவசியம்

குடும்பத்தில் எல்லா பிள்ளைகளிடமும் பெற்றோர்கள் சரி சமமான அன்பு பாசம் காட்டி அரவணைக்க வேண்டும்.

தாழ்வு மனப்பான்மை வளர விடாமல் காத்துக் கொள்ள வேண்டும். பெற்றோரிடம் உரிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காத சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் மன முறிவை போக்க போதையை பயன்படுத்தி தீர்வு காண முனைகின்றனர்.

Drugs Addiction சீரழியும் இளைஞர் சமுதாயம்

பொது வாழ்வில் ஏற்படும் போட்டி சூழலுக்கு முகம் கொடுக்க முடியாமை

சவால்களை சந்திக்க முடியாமல் தோல்வி மனப்பான்மைக்கு ஆளாகும்போது போதையை (Drugs Addiction) நாடுகின்றனர்.

பரீட்சையில் தோல்வி, போட்டி நிகழ்ச்சிகளில் தோல்வி,
படிப்பு ஏறவில்லை எனும்போது அவற்றுக்கு தீர்வாக போதையினை நாடுகின்றனர்.

இதுபோன்ற காரணிகளுக்கு உடந்தையாக மீடியாக்கள் செயற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மீடியாவின் போதைக்கு ஆதரவான பிரச்சாரம்

எந்தவொரு பிரச்சினையின் போதும் அதற்கு முகம் கொடுக்க முடியாதபோது போதையை பயன்படுத்துவதையே மீடியா முக்கியமான செய்தியாக காட்சிப்படுத்துகின்றது.

காதல் தோல்வி, குடும்பத் தகராறு, வாழ்வில் தோல்வி, வேலையின்மை, விரக்தி, நண்பர்களுக்கிடையிலான உறவில் விரிசல் போன்ற காட்சிகளில் கதாநாயகன் நாடக் கூடிய முதல் தீர்வு சிகரட் புகைப்பது, மது அருந்துவது என்பதைத்தான் இந்த சினிமா மற்றும் நாடகங்களில் காட்டப்படுகின்றது.

நமது நாட்டில் போதை பொருள் உபயோகம்
அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி பள்ளி மாணவர்கள் வரையில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக கைதாகும் செய்திகள் தொடர்ச்சியாக வந்தபடி உள்ளன.

கடந்த செப்டம்பர் மாதத்தில், குஜராத்தில் அதானி குழுமத்துக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகத்தில் 3.2 டன் அளவில் ஆப்கான் ஹெராயின் பிடிபட்டது.

அதன் மதிப்பு ரூ.21,000 கோடி. இவ்வாண்டில் இதுவரையில் 6 டன்னுக்கு மேல்ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகம் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் நுகர்வில் உலக சராசரி 0.7 சதவீதமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் போதைப்பொருள் நுகர்வு 2.06 சதவீதமாக உள்ளது.

இதில் கூடுதலாக கவனிக்கத்தக்க விசயம் போதைப்பொருள் நுகர்வில் மட்டுமல்ல, கைமாற்றிவிடும் இடமாகவும், விநியோக மையமாகவும் இந்தியா உள்ளது என்பதுதான்.

இந்தியாவில் முறைகேடான போதைப்பொருள் சந்தையின் மதிப்பு ரூ.30,000 கோடிக்கு மேல் என்று அனுமானிக்கப்படுகிறது.

மும்பை நகரம் இந்தியாவின் போதைப்பொருள் கடத்தலின் தலைநகரமாக திகழ்கிறது என இந்து தமிழ் நாளிதழ் குறிப்பிடுகிறது.

தற்போதைய இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்துவரும் மது, சிகரெட்போன்ற பழக்கங்கள் மிக மோசமாக வளர்ந்துள்ள நிலையில் தற்போது சில இளைஞர்கள் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது கொடிகட்டி பரக்க தொடங்கியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை மாத்திரைகள் அதிக அளவில் புழங்கிக்கொண்டிருக்கின்றன.

போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களில், 10 முதல் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக அதிகரித்துவருகிறது.

போதை பழக்கம் மீட்பு தொடர்பான மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது.

அதேபோல் போதைப்பழக்கத்தின் விளைவாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.

ஒரு சமூகத்தில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரிப்பது என்பது அந்தச் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்தச் சமூகம் வன்முறை மிக்கதாகவும், பாதுகாப்பற்றதாகவும் மாறும்.

இந்தப் புதைகுழியிலிருந்து இளைய தலைமுறையினரைக் காப்பது என்பது அவர்களின் குடும்பத்தினருக்கும் சரி, அரசுக்கும் சரி எளிதான செயல்பாடாக இருக்கப்போவதில்லை.

ஆறுமணி நேர அற்ப சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்கையை பணயம் வைக்கும் இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை மீட்பது நம் அனைவரதும் பொருப்பும், கடமையும் ஆகும்.

எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போதை பொருள் உபயோகம் இல்லாத சமூகத்தை உருவாக்குவோம்.

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ   ۛ وَاَحْسِنُوْا  ۛ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:195)

போதையால் ஏற்படும் உடல் , உள பாதிப்புகள்

இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் உபயோகம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டே உள்ளனர்.

சாராயம் அருந்துதல் மற்றும் போதை மருந்துகள் உட்கொள்வதால் போதை மயக்கத்தில் ஆழ்த்தி அவர்களுடைய விழிப்புணர்வை தொலைப்பது மட்டுமன்றி உடல் நலத்தை கெடுத்து அவர்களை அழித்து விடுகிறது.

போதை பொருள் உபயோகத்தால் இன்றைய இளைஞர்கள் சீரழிந்து கொண்டே செல்கின்றனர்.

மது, போதை வஸ்து மற்றும் சிகரெட்டினால் உடலின் பல உறுப்புகள் பாதிப்புக்குள்ளாக்குகின்றது.

ஈரல் நிரந்தர பாதிப்பிற்குள்ளாவதால் உடலின் நஞ்சகற்றல் செயல்பாடு, குருதியுறைதலிற்கு அவசியமான சுரப்பிகளின் தொகுப்பு என்பன இடம்பெறுதல் தடைப்பட்டு போய்விடுகிறது.

உடலில் நச்சுப் பொருட்களின் சேர்க்கையால் உடலில் பல உறுப்புகளில் அவை தங்கி உடலுறுப்புக்களில் புற்றுநோயைத் தோற்றுவிக்கிறது.

இன்றைய இளைஞர்கள் இவ்வாறான விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் இதனை ஒரு கலாச்சாரமாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

இதனால் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியிருத்தல், உளச்சோர்வுக்குள்ளாகல் நித்திரையின்மை போன்ற உளரீதியான பாதிப்புக்களுக்கு நாளடைவில் உள்ளாகின்றனர்.

இதனால் குடும்பத்தில் வன்முறைகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள், பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடன் தொல்லை, தற்கொலை, கொலை முயற்சி, பிள்ளைகளின் பராமரிப்பு பிரச்சினைகள், விபத்துக்கள் என்பன இடம்பெறுகின்றன.

அதே போன்று தான் சிகரெட் மதுபானம் ஆகியனவும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான போதைப் பொருட்களாகவுள்ளன. பொதுவாக போதைப் பொருட்களை உபயோகிப்போர் அதன் மூலம் ஒரு வித இன்ப உணர்வு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இவர்களுக்கு ஏற்படும் இந்த இன்பம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரங்களுக்கே நீடிக்கும் அதன் பிறகு அவர்களுக்கு மன அழுத்தம், எளிதில் கோபமடைதல், நினைவாற்றலில் குறைபாடு போன்ற குணங்களை கொண்டவர்களாக மாறுவர் என தெவிக்கப்படுகிறது.

இந்த போதைப் பொருள் உபயோகம் சிறுபராயத்திலியே ஏற்பட்டு விடுவதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக அவர்கள் தனிமையை விரும்பினால் அடிக்கடி பணம் கேட்டால், படிப்பில் நாட்டம் குறைந்தால் நடத்தைகளில் மாற்றம் தெரிந்தால் வழக்கத்திற்கு மாறாக நடவடிக்கை தென்படுமாயின் அவர்களை சற்று கூர்ந்து கவனிப்பது சிறந்தது.

முக்கியமாக இன்றைய இளம் சமுதாயத்தினர் இணையதளத்தை தங்கள் உலகமாகக் கருதி வாழ்வதால் அடிக்கடி அவர்கள் பார்க்கும் இணைய தளங்கள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்கவேண்டும்.

இவற்றைத்தவிர சிறுவயதிலிருந்தே கற்றலில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தல் பத்திரிகை வாசித்தல் விளையாடுதல் இறைவழிபாடு செய்தல் போன்ற பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தல் சிறந்தது.

இதன் மூலம் நமது குழந்தைகளை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.

அதையும் தாண்டி அவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி விட்டால் உடனடியாக மனநல மருத்துவர்களின் ஆலோசனைப்படி செயலாற்றுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

இது அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிச் செல்லாமல் இருக்கவும் வழி அமைக்கும்.

போதை பொருள் ஒழிப்பு பற்றி அதிகம் கலந்துரையாடுவோம்..

விழிப்போடு இருப்போம் போதை பழக்கத்தை தவிர்ப்போம்..

அல்லாஹ் நம்மையும் நம் சமூகத்தையும் இந்த போதையில் இருந்து காத்து அருள் புரிவானாக…

அன்புடன்

முத்துப்பேட்டை அலீம்

முந்தைய பதிவை படிக்க… புதிய இந்தியா பிறந்து விட்டது

Tags: Drugs Addictionகஞ்சாசாராயம்சீரழியும் இளைஞர் சமுதாயம்போதைபோதை ஊசிபோதைப்பொருள்
Share4Tweet3Pin1Send
Previous Post

New India – புதிய இந்தியா பிறந்து விட்டது

Next Post

Welcome Ramadan – ரமலானை வரவேற்போம்

RelatedPosts

Children Mental Health Questions
விழிப்புணர்வு

Children Mental Health Questions | குழந்தைகள் மனநலம் சார்ந்த கேள்விகள்

Boycott Jewish products
விழிப்புணர்வு

Boycott Jewish Products | யூத தயாரிப்புகளை புறக்கணிப்போம்

Modi Failed
அரசியல்

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

  • Trending
  • Comments
  • Latest
Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Free ai Certificate Course1

Free AI Certificate Course | இலவசமாக AI படிக்க வேண்டுமா?

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

கூட்டு மனசாட்சி

கூட்டு மனசாட்சி பெயரில் கொல்லப்பட்ட அப்சல் குரு

சமுதாயப் பிளவு

சமுதாயப் பிளவு தேவையா?

Deepfake Technology

Deepfake Technology – எதிர்கால சந்ததிகளின் வாழ்வை சீரழிக்குமா?

God's canon

God’s canon – இறைவனின் நியதி..!

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Children Mental Health Questions

Children Mental Health Questions | குழந்தைகள் மனநலம் சார்ந்த கேள்விகள்

எங்களுடன் இணைந்திருங்கள்

  • 99 Subscribers
  • 647 Followers

பிரபலமானவை

  • Mental Health Awareness for Child

    Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

    20 shares
    Share 7 Tweet 5
  • Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

    14 shares
    Share 6 Tweet 4
  • Free AI Certificate Course | இலவசமாக AI படிக்க வேண்டுமா?

    13 shares
    Share 5 Tweet 3
  • Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

    13 shares
    Share 5 Tweet 3
  • AI Technology -யை பயன்படுத்தி பொதுமக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள்?

    12 shares
    Share 5 Tweet 3
Facebook Twitter Instagram Youtube Reddit Tumblr Pinterest Whatsapp

என்னைப்பற்றி

VALAIYUGAM | அரசியல், விழிப்புணர்வு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

தலைப்புக்கள்

  • அரசியல் (20)
  • இஸ்லாம் (11)
  • ஊடகம் (3)
  • கல்வி (6)
  • கவிதைகள் (21)
  • டெக்னாலஜி (9)
  • தமுமுக (6)
  • தளங்கள் (6)
  • தொடர்கள் (3)
  • பொருளாதாரம் (5)
  • ரெவின்யூ (4)
  • விழிப்புணர்வு (6)

Translate to Your Language

புதிய செய்திகள்

Modi Failed

Modi Failed | 9 ஆண்டு மோடி அரசின் மோசடிகள் – பகுதி 1

Dishonest Indian Journalism

Dishonest Indian Journalism | நேர்மையற்ற ஊடகம்

Mental Health Awareness for Child

Mental Health Awareness for Child | குழந்தை மனநல விழிப்புணர்வு

Copyrights © 2023-2025 VALAIYUGAM - All Rights Reserved by VALAIYUGAM.COM

No Result
View All Result
  • முகப்பு
  • இஸ்லாம்
  • டெக்னாலஜி
  • கல்வி
  • கவிதைகள்
  • செய்திகள்
  • விழிப்புணர்வு
  • அரசியல்
  • ஊடகம்
  • தளங்கள்
  • பொருளாதாரம்

Copyrights © 2023-2025 VALAIYUGAM - All Rights Reserved by VALAIYUGAM.COM