புதிய இந்தியா பிறந்து விட்டது

ஆளும் இல்லை அரவமும் இல்லை…

ஏனென்று கேட்க ஒரு நாதியும் இல்லை…

நோயும் இல்லை நொடியும் இல்லை…

ஆனால் உயிர் வாழ வழியும் இல்லை…

சோறும் இல்லை பாலும் இல்லை…

சோதனைக்கும் பஞ்சமில்லை…

காயும் இல்லை கரியும் இல்லை…

கால் வயிறும் நிரம்ப வில்லை…

அமைதியும் இல்லை தூக்கமும் இல்லை…

நாளை பொழுதை நினக்க முடியவில்லை… – ஆனால்….

பசியும் இல்லை பஞ்சமும் இல்லை…

பால் பக்கெட் போட குறைவும் இல்லை…

புதிய இந்தியா பிறந்து விட்டது…

ஏழைகளை ஒழிக்க துவங்கி விட்டது…

அன்புடன் முத்துப்பேட்டை அலீம்

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *