தவ்ஹீதின் பெயராலே..!

தவ்ஹீதின் பெயராலே தரங்கெட்டு நிக்குது…
தமிழகமே இதைப்பார்த்து வெட்கித்தலை குனியுது…
பாசிசத்தின் மீது கொண்ட பாசமா?-இல்லை
பணத்துக்காக நீங்கள் போடும் வேஷமா?
நபிகள் நாயகம் காட்டித் தந்தது ஒற்றுமை-
இந்த நாதாரிகள் காட்டி கொடுப்பது வேற்றுமை..
கழிசடைகள் கூட்டமெல்லாம் கழுதை போல கத்துது…
காசுக்காக போட்ட வேஷம் கலைந்து தானே போகுது…
ஆணையத்தின் பெயரைச் சொல்லி ஆசை வார்த்தை காட்டுது…
அதனால் தான் சமூகத்தை பலி ஆடாய் பார்க்குது…
ஆரியத்தின் சூழ்ச்சியாலே அறிவிழந்து போனது…
காரியத்தில் தன் முகத்தில் கரியை பூசிக் கொண்டது…
இஸ்லாமியனை அழித்துவிட்டு இட ஒதுக்கீடு தேவையா?
இனியும் இந்த கூட்டத்தை நீயும் நம்பி போவியா?
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *