பொருளடக்கம்
No Fear
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்ச பட்ச தாக்குதலால் ஒடுக்கி ஆண்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
வஞ்சகத்தால் நெஞ்சகத்தில் கத்தி பட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
எங்கள்மீது தீவிரவாத பலி சுமத்தபட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
சுத்தியாலும் கத்தியாலும் கருவருத்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
கூட்டு மன சாட்சி என கூச்சல் போட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
கருத்து சுதந்திர போர்வையில் உலகே எதிர்த்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
தனதுயிரை துச்சமாக மதித்து நிற்கும் கூட்டமே
மத உணர்வை சீண்டினால் எதிர்த்து வீரம் காட்டுமே
சத்தியத்தை நெஞ்சகத்தில் தாங்கி நிற்கும் மக்களாய்
அஞ்சுவதும் கெஞ்சுவதும் இறைவனுக்கு மட்டுமே…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க : முஸ்லிம்களின் கனவு தேசம்