நாடு போர போக்கு…

உலகத்துலயே ரொம்ப பெரிய அறிவாளிங்க வாழ்ர நாடு நம்ம நாடா தான் இருக்கும்… என்ன பாக்குரீங்க…
சோத்துலையும் வாங்கியாச்சி…. சேத்துலயும் வாங்கியாச்சிங்கிர கதையா எவ்ளோது தான் பட்டாலும் புத்தி படிக்காத கூட்டமா ஆகிட்டு வரோம்…
சோத்த தின்னு சோத்த தின்னுன்னு நாம சொன்ன,  இல்ல நா …….ய தான்  தின்பேன்னா நாம என்னங்க பண்றது.
படிப்பறிவு, வளர்ச்சி, கூந்தலு,  குந்தானின்னு வாய்கிழிய பேசுரோம்… ஆனா சொரனன்னு ஒன்னு இருக்குரத  மறந்துடுரோம்…
என்னத்த படிச்சி என்ன பன்னுரது… மூளைய அடகுல வச்சிட்டு ஒரு  மூலைல போய் தானே கிடக்குறோம்..
12 வதுல பாஸ் பன்னுனவன் அந்த ஒரு நாள் தான் சந்தோசமா இருக்கான்… ஆனா  பெயில் ஆனவன் எதாவது தொழில கத்துகிட்டு சொந்தமா எதயோ பன்றான்…
12 வது பாஸ்  பன்னுனவன் மேற்கொண்டு படிச்சி டிகிரிய வாங்கிகிட்டு 12 வதுல ஃபெயிலா போயி  தொழில் செய்ரானே அவன்கிட்ட வேலக்கி போய் நிக்கிறான்.
அப்போ என்ன  கருமத்துக்கு படிக்கனும்… அட நியாயமான கேள்விதானங்க…
8 வது படிச்சா  அமைச்சர் ஆகலாம்… என்ன ஒன்னு… சாராயம் காய்ச்சின அனுபவம் இருக்கனும், மக்கள  ஏச்சி ஏழைங்க வயித்துல அடிச்சி பொழச்சிருக்கனும் இப்படி சில தகுதி இருந்தா  அமைச்சர் ஆகலாம்னா என்ன அரசாங்கம் இது? என்ன சட்டம் இது… ?
இதெல்லாம் கேள்வி கேட்டா கேட்டவன  ஏதோ கீழ்பாக்கத்துலேர்ந்து தப்பிச்சி  வந்தவன பார்க்குர மாதிரி பார்க்குரது… நீங்கள்ளாம் என்ன டிஷைனோ தெரியல…
ஐஏஸ் படிச்சாலும் 8 ஆம் வகுப்புல 8 தடவ ஃபெயிலா போய் சாராயம் காய்ச்சினவனுக்கு தான் சல்யூட் அடிக்கனும்னா எதுக்குயா இந்த ஐஏஸ்…
ஊரு மேயிர மாட்ட நம்பி நாட்ட கொடுத்துட்டு கோமியத்த வாங்கி குடிசிகிட்டு நிக்கிறோம்…
ஊருக்குள்ள ஒரு பழமொழி சொல்வாங்க….
நாய்க்கு ஒரு வேலையும் இல்லையாம் ஆனா நாய் அழைர அழச்சல் வேர யாருக்கும்  இல்லயாம்ங்கிர கதையா உலகத்த வெட்டியா சுத்தியும் எந்த முன்னேற்றமும் இல்ல…
வாரத்துக்கு ஒரு வரிய போட்டு நாட்டு மக்கள நாண்டுகிட்டு சாக வழி செஞ்சது தான் மிச்சம்…
இருக்குற விவசாயிங்க கொஞ்சம் கொஞ்சமா தற்கொல பன்னிக்கிட்டு  செத்துப்போராங்க… அத என்னானு கேட்க துப்பில்ல அவங்க கஷ்டத்த போக்க திராணி  இல்ல… சாமியாருக்கு ஏக்கர் கணக்குல எழுதி கொடுக்குராங்கலாம்…
புள்ளையாரே பெருச்சாளியில போராரம்… பூசாரிக்கு புல்லட் கேட்குதாம்… புல்லட்டு….
இத கேட்க நாட்டுல ஒரு அறிவாளியுமா இல்லாம போய்ட்டாங்க…
நாடு முழுக்க 256 மாவட்டங்கள்ள 33 கோடி பேர் வரட்சியால பாதிக்கப்பட்டு  நடுத்தெருவுல நிக்கிறாங்க. இவங்களுக்கு என்ன உதவப்போறோம்னு ஒரு அரசாங்கம்  நினச்சிருந்தா அது மக்கள் நல அரசு. ஆனா இதபத்தி கொஞ்சமும் கவலப்படாம  அம்பானிக்காகவும், அதானிக்காகவும் நாடு நாடா சுத்தி வியாபாரம் புடிச்சி  கொடுக்குராங்களாம்…  அம்பானிக்கும், அதானிக்கும் புரோக்கர் வேல பாக்கவா   உங்கள மக்கள் ஆட்சில உட்கார வச்சாங்க…
தன்ன பத்தி புகழ் பாட விளம்பரத்துக்கு செலவு செய்ர காச அன்றாடம்  செத்துகிட்டு இருக்குர மக்களுக்கு எதயாவது செஞ்சிருக்கலாம். ஆனா நம்பி  ஓட்டுப்போட்ட மக்கள பத்தி துளியும் கவலப்படல. அட… இவங்க மாட்டப்பத்தி  மட்டும் தான் கவலப்படுவாங்க…. நாட்டப்பத்தி இல்ல…
அரசியல் வியாதிகள் தான் இப்படினா… அவங்கள தோல உறிச்சி தொங்கப்போட  வேண்டிய ஊடகங்கள் ஊமையா இருந்தா கூட விட்டுடலாம், ஆனா ஊது குழலா  போயிட்டாங்களே…
இந்தியனா பொறந்தது குற்றமா? இல்ல மனுஷனா பொறந்தது குற்றமா?
இந்தியாவுல, ஒன்னு அரசியல்வாதிகளுக்கு புள்ளையா பொறந்திருக்கனும் இல்ல  ஒரு மாடா பொறந்திருக்கனும் இல்லன்னா வாழ வழியும் இல்ல வாழ விடவும்  மாட்டனுங்க…
மாற்றம் வேணும் மாற்றம் வேணும்னு வாயால வட சுட்டுகிட்டே இருந்தா ஏமாற்றம் மட்டும் தான் மிஞ்சும்.
இனியாவது சிந்திங்க…
ஆட்சிய கொடுக்குரதுக்கு முன்னாடி ஆளு எப்புடின்னு பாருங்க… கொடுத்த பின்னாடி குத்தே கொடையுதேன்னா என்ன செய்யமுடியும்…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *