மமகவில் பிளவும், வன்முறையும் ஏன்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அன்புள்ளம்கொண்ட சமுதாயமே…  சிந்திப்பீர்….
கூட்டுத்தலைமை வழி நடத்த கூட்டாய் போட்டோம் வெற்றி நடை என்று  வெற்றிப்படிக்கட்டுகளை எட்டிப்பிடித்த மனிதநேய மக்கள் கட்சியின் பிளவுக்கு  மிக முக்கிய காரணம் என்ன?
உட்கட்சி ஜனநாயகம் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். தமுமுகவின் கடந்த கால  செயற்குழுக்களும், பொதுக்குழுக்களும் எப்படி இருந்தன? தற்போது எப்படி  உள்ளது என்பது காலம்காலமாக கழகத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மற்றும் ஹைதர் அலி ஷாப் அவர்களின் தலைமையின்  கீழ் தமுமுக செயல்பட்ட காலங்கள் மிகச்சிறப்பான காலங்கள். அன்று ஒருமித்தமாக  சமூகம் அவர்களை கூட்டுத்தலைமையாக பார்த்தது. தொடர்ந்து அவர்களே  தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் இருந்திருந்தால் அவர்கள் கைகளிலேயே  அதிகாரம் இருந்திருக்கும். இப்படி ஒரு பிரிவினை தோன்றி இருக்காது.
மாறாக அவர்கள் எப்போது மூத்த தலைவர்களாக அறிவிக்கப்பட்டார்களோ அன்றே பிரிவினை காலம் துவங்கிவிட்டது.
மூத்த தலைவர்கள் இளையவர்களுக்கு வழிவிட்டு விலகி நிற்ப்பது தான் அழகு.  ஆனால் அமைப்பின் ஒவ்வொறு செயல்பாட்டிலும் தலையிடுவதும், தங்கள் கருத்தை  திணிப்பதுமாக மூத்த தலைவர்கள் செயல்பட்டுவந்தது ஆரோக்கியமானதல்ல. நிர்வாகம் 2 அல்லது 3 ஆண்டுக்கு ஒரு முறை மாற வேண்டும். அவ்வாறு மாற்று  தலைவர்களை உருவாக்கி இருந்திருந்தால் இன்று மமக இப்படியொறு பிளவை  சந்தித்திருக்காது, சந்தி சிரித்திருக்காது.
தலைவர்கள் காலங்காலமாக தலைவர்களாகவே இருந்து விட்டதின் காரணமாக அவர்களால்  அந்த தலைமைத்துவத்தை விட்டுக் கொடுக்க முடியவில்லை. அதற்காக எந்த  நிலைபாட்டையும் எடுக்க துணிந்துவிட்டனர்.
ஆரம்பத்திலேயே நிர்வாகம் மாற்றம் செய்யப்பட்டு குறிப்பிட்ட 2 ஆண்டுகள் வரை  தலைவராக இருந்தவர் பிறகு உருப்பினராக செயல்பட்டிருந்தால் இன்று அடுத்து  அடுத்து என தலைவர்கள் மாறி மாறி வந்திருப்பார்கள். அவர்கள்  பொருப்பிலிருந்து வெளியேற்றினாலும் 10 முன்னாள் தலைவர்களில் தானும் ஒருவன்  ”பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று” என்று அமைப்பின் அடுத்த தலைவரின்  கீழ் செயல்பட தொடங்கி இருப்பார்கள்.
நாமும் விடவில்லை அவர்களும் விலகிச் செல்லவில்லை. விளைவு பிளவு…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
மு.மா.து.தலைவர் (தமுமுக)
திருவாரூர் மாவட்டம்.
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *