இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயனிக்கிறதா?

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கையை அளவீடு செய்ய பல்வேறு வழிகள் வழிமுறைகள் உள்ளன. அவைகளில் மிக முக்கியமானவைகள் :

  • நுகர்வோர் செலவு
  • வெளிநாட்டு நாணய பரிமாற்று விகிதம்
  • உள்நாட்டு மொத்த உற்பத்தி
  • மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி
  • பங்குச் சந்தை
  • விலையுயர்வு விகிதம்
  • வேலைவாய்ப்பின்மை
  • வர்த்தகச் சமநிலை
    ஆகியன ஆய்வு செய்யப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள எந்த நடவடிக்கை சீரான வளர்ச்சி பாதையில் உள்ளது?

எதிலும் வளர்ச்சி பெறாத நிலையில் இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைந்து விட்டதாக பொய்யில் புலவர் மோடி கொக்கரிக்கிறார். அதை அப்படியே விபச்சார ஊடகங்களும் வாந்தி எடுக்கின்றன.

நாட்டின் வளர்ச்சி அந் நாட்டின் பண வீக்கத்தை கொண்டு அளவிடப்படும் என்பது மக்களுக்கு தெரிந்துள்ளது ஆனால் பிரதமருக்கும், ஊடகங்களுக்கும் தெரியவில்லை என்பது சற்று சங்கடமாகவே உள்ளது.

பணவீக்க விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து சந்தி சிரிக்கிறது, ஆனால் வளர்ச்சி வளர்ச்சி என்று நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

ஒரு தனி நபர் ஒரு பொருளை வாங்கும் திரன் அதிகரிக்க வேண்டும். அது தான் வளர்ச்சியே தவிர, ஒரு தனி நபருக்கு (அம்பானி, அதானி, டாடா, …) மட்டும் வாங்கும் திரன் அதிகரிப்பது வளர்ச்சியல்ல…

நுகர்வோரின் செலவு அதிகரித்த அளவிற்கு அந்நுகர்வோரின் வருமானமும் அதிகரிக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு 5000 ரூபாய் சம்பளம் வாங்கியவன் இன்றும் அதே சம்பளம் தான் வாங்குகின்றான். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏறிய விலையால் அவனது வருமானம் போதுமானதாக இல்லை.

கடந்த காலங்களை காட்டிலும் அதிகமான இளைஞர்கள் படித்து பட்டம் பெற்றும் வேலைவாய்ப்பின்மையால் வாடி வருகின்றனர். இது தான் வளர்ச்சி போலும்…

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்… கார்ப்பரேட்டுக்ளுக்காக ஆட்சி நடத்தும் மத்திய அரசு ஒருபக்கம் என்றால் மாநில அரசுகள் சொல்லத்தேவையில்லை.

வாங்கும் திரன் அதிகரிப்பது பொருளாதாரத்தின் வளர்ச்சி… ஆனால் வாங்கும் திரன் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை இலவசங்களின் மூலமாக அறிய முடிகிறது. நேற்றுவரை காசு கொடுத்து வாங்க சக்தி பெற்றவன் இன்று அரசு இனாமாக கொடுக்குமா என காத்து கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான் என்றால் இது தான் வளர்ச்சியா?

மீண்டும் ஒரு சுதந்திரப்போராட்டத்தை சந்திக்க இந்தியா தயாராகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது…

அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்

நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published.