இன்னும் தூக்கம் எதற்கு தோழா புறப்படு…
துக்கம் தொலைக்க தூக்கம் தொலைத்து புறப்படு…
ஜனநாயகம் காக்க இளம் நாயகனே நீ புறப்படு…
மதவாதம் போக்க பிடிவாதத்தோடு நீ புறப்படு…
சாதியை ஒழித்த சாதனையாளனே நீ புறப்படு…
நெஞ்சில் சுமக்கும் நீதியோடு நீ புறப்படு…
வஞ்சம் சுமக்கும் அனீதிக்கெதிராய் நீ புறப்படு…
ஊடக தீவிரவாதத்தை தீர்த்துக்கட்ட நீ புறப்படு…
அசுத்த அரசியலை சுத்தமாக்க நீ புறப்படு…
தாழ்ந்தவனல்லவே தோழா நீ புறப்படு…
தாழ்த்தப்பட்டவனே தோழா நீ புறப்படு…
தாழ்த்தியவனை வீழ்த்துவதற்க்கு நீ புறப்படு…
பிற்படுத்தப்பட்ட முற்போக்காளனே நீ புறப்படு…
பிற்படுத்தியவனை பின்னுக்கு தள்ள நீ புறப்படு…
புறப்படு தோழா புறப்படு…
விழித்தெழு தோழா விழித்தெழு…
இன்னும் தூக்கம் எதற்கு தோழா புறப்படு…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்