ஒளவியம் இல்லா ஒளரதன்
அச்சம் இல்லா ஆதவனாக அணிதிரள்வோம்
ஆணவம் இல்லா புனிதர்களாய் நாம் அணிதிரள்வோம்
இரக்கம் இல்லா மனிதர்களுக்கு எதிராய் அணிதிரள்வோம்
ஈடு இல்லா இறை துணையோடு நாம் அணிதிரள்வோம்
உரக்கம் இல்லா விழிகளோடு நாம் அணிதிரள்வோம்
ஊழல் இல்லா உலகை படைக்க நாம் அணிதிரள்வோம்
எதிரிகள் இல்லா சமூகம் உருவாக நாம் அணிதிரள்வோம்
ஏக்கம் இல்லா சமுதாயம் படைக்க அணிதிரள்வோம்
ஐயம் இல்லா வையம் படைக்க அணிதிரள்வோம்
ஒழுக்கம் இல்லா மனிதர்களை களையெடுக்க அணிதிரள்வோம்
ஓலம் இல்லா காலம் காண அணிதிரள்வோம்
ஒளவியம் இல்லா ஒளரதனாக நாம் அணிதிரள்வோம்
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
முந்தைய பதிவை படிக்க : அஞ்சி ஓடாத நெஞ்சம்