ஒன்றுபட்டு வாரீர்..!

காலங்காலமாய் நாம் காத்திருந்தது போதும்
இனி எழுச்சி பெற வேண்டும்
நம் உரிமைகளை வென்றெடுக்க
ஒன்றுபட்டு வாரீர்…
காலங்காலமாய் நாம் அடிமைபட்டது போதும்
இனி அறிவு பெற வேண்டும்
நம் உடைமைகளை காத்திடனும்
ஒன்றுபட்டு வாரீர்….
காலங்காலமாய் நாம் பிளவுபட்டது போதும்
இனி உலகை ஆள வேண்டும்
நம் பிளவுகளை மறந்துவிட்டு
ஒன்றுபட்டு வாரீர்…
காலங்காலமாய் கண் கலங்கி நின்றது போதும்
இனி கல்வி நமக்கு வேண்டும்
நம் கடமைகளை கருத்தில் கொண்டு
ஒன்றுபட்டு வாரீர்…
காலங்காலமாய் நாம் துன்பப்பட்டது போதும்
இனி துரத்தி அடிக்க வேண்டும்
நம் எதிரிகளை களைஎடுப்போம்
ஒன்று பட்டு வாரீர்..
காலங்காலமாய் நாம் துயரப்பட்டது போதும்
இனி உயர பரக்க வேண்டும்
நாம் ஒன்றிணைந்து போராட
ஒன்றுபட்டு வாரீர்…
மனங்கள் யாவும் மறித்து போன ஜடங்களான ஜாலம்….
மனிதநேயம் மறந்து போன மக்கள் வாழும் காலம்…
கடமை மறந்து கவனமிழந்து வாழ்வை துரக்கலாமோ…?
சதிகள் மறந்து சகலம் இழந்து சாவை தேடலாமோ?
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று கூடி நிற்ப்போம்…
இரண்டுபட்டால் இருப்பதையே இழந்து வாடி இருப்போம்…
கேடிகளையும் மோடிகளையும் துரத்தி துரத்தி அடிப்போம்…
இறைவன் அவன் நாடிவிட்டால் அதிகாரத்தை பிடிப்போம்…
அன்புடன்
முத்துப்பேட்டை அலீம்
நான் முஹம்மது அலீம், சமூகத்தின் அவலங்களையும், பிரச்சினைகளையும் களையவேண்டுமென்ற நோக்கில் செயலாற்றக்கூடியவன். சமுதாய அமைப்பில் பொருப்புவகித்தாலும், ஒருபக்க சார்பில்லாத நிலையில் அல்லாஹ் சொல்லும் நடுநிலையை பேணக்கூடியவன். சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், சமூகத்தின் குரலாகவும் ஒலிப்பதே இத்தளத்தின் நோக்கமாக கொண்டு எழுதுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் என் சமூகம் முன்னேறும், வெற்றி பெறும். இன்ஷா அல்லாஹ்...

Leave a Reply

Your email address will not be published.